எண்ணெய் கிடங்கு மீது உக்ரைன் தாக்குதல்! ரஷ்யா கொடுத்த பதிலடி-செய்திகளின் தொகுப்பு
ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் உக்ரைனின் ஷக்தார்ஸ்க் நகரில் தொடருந்து நிலையம் மற்றும் எண்ணெய் சேமிப்பு கிடங்கு மீது உக்ரேனிய படைகள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் எண்ணெய் கிடங்கு தீப்பற்றி எரிந்துள்ளது.
ரஷ்யாவின் வான் தாக்குதலில் உக்ரைன் நகரங்களில் உட்கட்டமைப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
உக்ரைன் படைகளும் சளைக்காமல் பல்வேறு நாடுகளின் இராணுவ ஆயுதங்கள் உதவியுடன் ரஷ்யாவுக்கு பதிலடி கொடுத்தவண்ணம் உள்ளது.
இந்தநிலையில், ஷக்தார்ஸ்க்கில் உக்ரைன் இராணுவம் நடத்திய தாக்குதலில் எண்ணெய் கிடங்கு தீப்பற்றி எரிந்தமையால், விண்ணை முட்டும் அளவிற்கு கரும்புகை எழுந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான மாலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,