ரஷ்யாவிற்கு ஆதரவாக பேசிய உக்ரைனிய மதகுருவிற்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை
கிவ் நகரிலுள்ள உக்ரைனிய ஆர்த்தடாக்ஸ் தேவாலயம்(UOC) ரஷ்யாவின் சார்பில் இயங்குவதாக எழுந்த குற்றச்சாட்டை தேவாலயம் மறுத்துள்ளது.
இந்த நிலையில் கிவ் தேவாலயத்தில் பிரசங்கம் செய்யும் பாவ்லோ என்ற மதகுரு ரஷ்ய படையெடுப்பை பெருமையாக பேசியதற்காக 60 நாட்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வீட்டுக் காவலில் மதகுரு
ரஷ்ய படையெடுப்பை மிகைப்படுத்தி பேசிய குற்றச்சாட்டிலே உக்ரைனிய மதகுருவை அந்நாட்டு அரசு வீட்டுக் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.
ரஷ்யாவில் உறவுகள் இருப்பதாக கூறப்பட்டும் தேவாலயத்தைச் சேர்ந்த ஒரு உயர்மட்ட உக்ரைனிய மதகுரு, ரஷ்யப் படைகளை ஆக்கிரமித்ததை மகிமைப்படுத்தியதற்காகவும், மதப் பிளவுகளைத் தூண்டியதற்காகவும் தேவாலயம் தெரிவித்துள்ளது.
மதகுரு பாவ்லோ, 980 ஆண்டுகள் பழமையான மடாலய வளாகமான கிவ்-பெச்செர்ஸ்க் லாவ்ராவில் தங்கியிருந்தார்.
இந்நிலையில் தேவாலயத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளதுடன் தேவாலய வழிபாடுகளில் கலந்துக்கொள்ள அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
புனித தேவாலயத்தை தாக்கிய உக்ரைன்
ஆர்த்தடாக்ஸ் தேவாலயத்தின் மூத்த அதிகாரியான பாவ்லோ,கிவ்-பெச்செர்ஸ்க் லாவ்ராவின் மடாதிபதி ஆவார். கிவ் நகரில் இருந்து தென்கிழக்கே 40 கிமீ (25 மைல்) தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில் பாவ்லோவை தங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
"அந்த வீடு குடியிருக்க ஏற்றதல்ல.தூங்குவதற்கு எந்த உடைமையுமில்லை, சூடு இல்லை, விளக்கும் இல்லை. சமையலறையும் இல்லை. ஆனால் பரவாயில்லை, எல்லாவற்றையும் தாங்கிக் கொள்கிறேன்"என பாவ்லோ கூறியுள்ளார்.
இந்த தேவாலயத்திற்கும் ரஷ்ய தேவாலயத்தோடு பண்டைய காலம் முதலே தொடர்பு இருந்து வருகிறது.
கடந்த மாதம் ரஷ்யாவின் தொடர்பிலிருந்த இந்த புனித தேவாலயத்தை உக்ரைன் தாக்கியதாக ரஷ்யத் தரப்பு கூறியிருந்தது.
இந்த நிலையில் மதகுருவின் கைது ஒரு இராணுவ நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
You may like this video

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri
