பிரித்தானிய அரசு குறித்து பரவும் கேலி கிண்டல்கள்.. போராட்டத்திற்கு மத்தியில் பதிவான காட்சி
பிரித்தானியாவில் புலம்பெயர்தலுக்கு எதிராக நடந்த பிரம்மாண்ட பேரணிகள், போராட்டங்களுக்கு மத்தியில் நடந்த ஒரு விடயம் சமூக ஊடகங்களில் கேலிக்குள்ளாகியுள்ளது.
இதன் காரணமாக புலம்பெயர்தலுக்கு எதிரான நடவடிக்கை குறித்து பல்வேறு வகையில் கேலியான கருத்துக்கள் பரவப்பட்டு வருகின்றன.
கடந்த சனிக்கிழமை, புலம்பெயர்தலுக்கு எதிராக பேரணி நடத்த, சுமார் ஒன்றரை இலட்சம் பிரித்தானியர்கள் லண்டனில் திரண்டார்கள்.
வெளியான காணொளிகள்
லண்டனே ஸ்தம்பித்தது போன்ற ஒரு சம்பவம் தொலைக்காட்சிகளில் வெளியாகிக் கொண்டிருந்த நிலையில், அதன் நடுவே ஒரு வேடிக்கை காட்சி கெமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
புலம்பெயர்தலுக்கு எதிராக பேரணி நடத்தியவர்களில் சில பிரித்தானியர்கள், சாலையோர இந்திய உணவகம் ஒன்றிற்குச் சென்று சிற்றுண்டி வாங்கி உண்ணும் காட்சியை சிலர் படம் பிடித்து சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர்.
#UniteTheKingdom #TommyRobinson
— Mike Town (@MikeTown44) September 13, 2025
Can’t make this up! 🤣😂 pic.twitter.com/TdIZivZ4Wm
அத்துடன், பேரணியில் ஈடுபட்ட சிலர், ஆப்கானிஸ்தான் உணவகம் ஒன்றின் முன் வரிசையில் நிற்கும் காட்சிகளும் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், அவற்றை பார்வையிட்டவர்கள், பிரித்தானியர்களுக்கு, புலம்பெயர்ந்தோர் வேண்டாமாம், ஆனால், அவர்களுடைய சாப்பாடு மட்டும் வேண்டுமாம், என்னும் ரீதியில் கேலியும் கிண்டலும் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 9 மணி நேரம் முன்

குணசேகரன் கேங்குக்கு விபூதி அடிக்கப்பட்டு கடத்தப்படுகிறாரா தர்ஷன், ஜனனி பிளான் என்ன.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
