ரஷ்யாவிலிருந்து உக்ரைனுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை
உக்ரைனை தாக்கி அழிக்கும் அளவிற்கு ரஷ்யாவில் கிளஸ்டர் குண்டுகள் உள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
தொலைக்காட்சியொன்றிற்கு அளித்த பேட்டியில் அவர் இந்த பகிரங்க அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கிய கொத்துக் குண்டுகளை ரஷ்ய இராணுவத்துக்கு எதிராக பயன்படுத்தினால், ரஷ்யாவுக்கு சொந்தமான கிளஸ்டர் குண்டுகளை பயன்படுத்த ரஷ்யாவுக்கு உரிமை உண்டு எனவும் புடின் தெரிவித்துள்ளார்.
மேலும், கிளஸ்டர் குண்டுகளை இங்கிலாந்து உட்பட 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், ரஷ்யாவிடம் போதுமான அளவு கையிருப்பு உள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி கூறியுள்ளார்.
கிளஸ்டர் குண்டுகள் எங்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டால், பரஸ்பர நடவடிக்கை எடுக்க எங்களுக்கு உரிமை உள்ளது" என்றும் புடின் பேட்டியில் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 3 நாட்கள் முன்

Viral Video: பாம்புகள் கூட்டமாக ஓய்வெடுப்பதை பார்த்ததுண்டா? 7 மில்லியன் பேரை புல்லரிக்க வைத்த காட்சி Manithan

உக்ரைனில் பொதுமக்கள் கொல்லப்படுவதை நிறுத்துவது எப்போது? பத்திரிகையாளர் கேள்விக்கு புடினின் செய்கை News Lankasri

கூலி படத்தில் வெறித்தனமான வில்லனாக நடிக்க சௌபின் சாஹிர் வாங்கிய சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam
