வாக்னர் கூலிப்படை தலைவர் தொடர்பில் நீடிக்கும் மர்மம்: பெலாரஸ் ஜனாதிபதி வெளியிட்டுள்ள பரபரப்பு தகவல்
வாக்னர் கூலிப்படை தலைவரான Yevgeny Prigozhin பெலாரஸிலிருந்து மாயமாகியுள்ளதாக பெலாரஸ் ஜனாதிபதி Alexander Lukashenko வெளியிட்டுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவில் ஆட்சியை பிடிக்க மாஸ்கோவில் தனது வீரர்களுடன் அணிவகுப்பு நடத்திய நிலையில், பெலாரஸ் ஜனாதிபதியின் மத்தியஸ்தத்தை தொடர்ந்து, அவர் பெலாரஸ் புறப்பட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில், அவர் தற்போது பெலாரஸ் நாட்டில் இல்லையென பெலாரஸ் ஜனாதிபதி கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து அவரின் வீட்டை ரஷ்ய படைகள் சோதனையிட்டுள்ளதுடன், அவரது வீட்டில் தங்கம் முதலான விலையுயர்ந்த பொருட்கள் மற்றும் துப்பாக்கிகளுடன், ஃப்ரேம் செய்யப்பட்ட துண்டிக்கப்பட்ட தலைகளைக் காட்டும் புகைப்படம் ஒன்றும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இந்நிலையில், சுமார் இரண்டும் வாரங்களாக வாக்னர் கூலிப்படை தலைவர் மாயமாகியுள்ளதுடன், அவர் குறித்த விடயங்கள் மர்மமாகவே நீடிப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறான நிலையில், ரஷ்யாவிலிருந்து வெளியேற்றப்பட்ட வாக்னர் கூலிப்படை தலைவன் எவ்ஜெனி பிரிகோஜின், கடந்த வாரம் தங்கள் படையின் வெற்றியை இனி தடுக்க முடியாது என ஓடியோ ஒன்றை வெளியிட்டு சபதம் செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |