நேட்டோவுடன் போரிட நேரிடும்: ரஷ்யா எச்சரிக்கை
நேட்டோவின் ஐரோப்பிய உறுப்பு நாடுகள் உக்ரைனில் போரிடுவதற்காக தங்களது துருப்புக்களை அனுப்பினால் தமது படையினருக்கும் நேட்டோ இராணுவக் கூட்டணிக்கும் இடையேயான மோதலை தவிர்க்க முடியாது என ரஷ்யா எச்சரித்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு யுத்தம் மேற்குலக நாடுகளுடனான ரஷ்யாவின் உறவுகளில் விரிசல்களை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், நேட்டோவுக்கும் ரஷ்யாவிற்கும் இடையேயான நேரடி மோதலின் ஆபத்துகள் குறித்து முன்னதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் எச்சரித்திருந்தார்.

ரஷ்யாவுக்கும் நேட்டோவுக்கும் இடையில் மோதல்
இதேவேளை, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் நேற்றைய தினம் ஐரோப்பிய நாடுகளின் துருப்புக்களை உக்ரைனுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கையை ஆரம்பித்துள்ளார்.

இது தொடர்பில் ரஷ்ய அரசாங்கத்தின் பேச்சாளர் டிமிட்ரி பெஸ்கோவிடம் செய்தியாளர் ஒருவர் வினவியபோது, நேட்டோவுடன் ரஷ்யா போரிடுவதை தவிர்க்க முடியாது எனவும் பதிலளித்துள்ளார்.
இந்த நிலையில், ரஷ்யாவுக்கும் நேட்டோவுக்கும் இடையிலான மோதல் மூன்றாம் உலகப் போரைத் தூண்டும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam