உக்ரைன் படைகளுக்கு தொடர் பின்னடைவு: ஆயுதப்படை தளபதி அதிரடியாக மாற்றம்
உக்ரைன்-ரஷ்யா போர் 3 ஆவது ஆண்டை நெருங்கியுள்ள நிலையில் தரைப்படைகளுக்கு தலைமை தாங்கி வந்த அலெக்சாண்டர் சிர்ஸ்கி ஆயுதப்படை தளபதியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் ஜெலென்ஸ்கி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
ஆயுதப்படை தளபதியாக இருந்த வலேரி ஜலுஷ்னி, 2 ஆண்டுகளுக்கு முன்பு தேசிய வீரராக கொண்டாடப்பட்ட நிலையில் சமீப காலமாக போரில் உக்ரைன் படைகளுக்கு தொடர் பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளன.
போர் வீரர்கள் பற்றாக்குறை
மேலும் போரில் வீரர்கள் பற்றாக்குறை ஏற்பட்ட நிலையில், புதிய வீரர்களை அணிதிரட்ட சட்ட மாற்றங்கள் அவசியம் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இதன் காரணமாக ஜெலன்ஸ்கி மற்றும் வலேரி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்ட நிலையில், தற்போது ஆயுதப்படை தளபதி அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |