ரஷ்யர்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக்கோரிய புடின்! வெளியான காரணம்
அடுத்த ஆண்டு 1.2 பில்லியன் முட்டைகளுக்கான இறக்குமதி வரியை குறைக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் வருடத்தின் இறுதியில் பொதுமக்கள் மத்தியில் உரையாடிய போதே இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
ரஷ்யாவில் பணவீக்கம் உயர்வு
விலை உயர்வுக்காக நான் மன்னிப்பு கேட்கிறேன். ஆனால் இது அரசாங்க பணியின் தோல்வி. எதிர்காலத்தில் இந்த பிரச்சினை சரி செய்யப்பட்டு சூழ்நிலை சரியாகும்.
ரஷ்யாவில் பணவீக்கம் மிகவும் மோசமாக இருந்து வருகின்றது.
கடந்த மாத (நவம்பர்) நிலவரப்படி ஒட்டுமொத்த பணவீக்கம் 7.4 சதவீதமாக இருந்தது. இது இன்னும் உயர்ந்து 8 சதவீதமாக ஆகலாம்.
இது மத்திய வங்கி நிர்ணயித்திருந்த அளவை விட இரண்டு மடங்கு அதிகம் ஆகும். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கிய பிறகு முட்டையின் விலை சுமார் 40 சதவீதம் உயர்ந்துள்ளது.
வர்த்தக தடைகள்
மேற்கத்திய நாடுகள் பல்வேறு வர்த்தக தடைகள் விதித்துள்ளதால் முட்டை உற்பத்தியாளர்கள் கோழி தீவனம் போன்றவற்றை இறக்குமதி செய்ய முடியாத நிலை உள்ளது. இதனால் உள்நாட்டு உற்பத்தி மிகப்பெரிய அளவில் குறைந்துள்ளதாக தெரிகிறது.
மேலும், இறக்குமதி வரியை உயர்த்தியதும் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது. எனவே, அடுத்த ஆண்டு 1.2 பில்லியன் முட்டைகளுக்கான இறக்குமதி வரியை குறைக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளது.
முக்கிய ஆதாரங்களுடன் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலர் வெளியிடும் தகவல்கள் (Video)
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |