வாக்னர் தலைவர் பிரிகோஜின் விமான விபத்தில் பலி - உறுதிபடுத்திய ரஷ்யா
வாக்னர் தலைவர் பிரிகோஜின் விமான விபத்தில் உயிரிழந்தமையை மரபணு ஆய்வில் ரஷ்ய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு எதிராக அண்மையில் கிளர்ச்சியில் ஈடுபட்ட வாக்னர் கூலிப்படைத்தலைவர் பிரிகோஜின் விமான விபத்தில் உயிரிழந்தமையை அந்நாடு உறுதிப்படுத்தியுள்ளது.

மரபணு ஆய்வு
இந்த விமான விபத்தில் கிடைத்த உடல்களை மரபணு ஆய்வு செய்ததில் பிரிகோஜின் உயிரிழந்தமையை உறுதியானதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரஷ்யாவின் வான் போக்குவரத்து ஆணையம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியிட்ட தகவல்களில் பிரிகோஜினின் தனியார் ஜெட் விமானம் விபத்தில் சிக்கியதாகவும், இந்த தனியார் விமானத்தில் பயணம் செய்தவர்கள் பட்டியலில் பிரிகோஜின் பெயர் இடம்பெற்று இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், விமானம் மாஸ்கோவில் இருந்து செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நோக்கி சென்று கொண்டிருந்த போது நடுவழியில் வெடித்து சிதறியமை குறிப்பிடத்தக்கது.
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri