உக்ரைனிலிருந்து 5,900 அடி தொலைவில் சீறிப்பாயும் துப்பாக்கி குண்டு! ரஷ்யாவிற்கு கடும் எச்சரிக்கை
உக்ரைனின் துப்பாக்கி சுடும் வீரர் ஒருவரால் 5,900 அடி தொலைவில் இருந்து ரஷ்ய தளபதி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
உக்ரைனின் பேய் படையின் ஆல்ஃபா என அறியப்படும் உக்ரைன் துப்பாக்கி வீரர் ஒருவரால் பக்மூத் நகரத்தில் வைத்து ரஷ்ய தளபதி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆல்ஃபாவால் 5,900 அடி தொலைவில் இருந்து கொல்லப்பட்டவர் பிராந்திய படைகளின் துணைத்தளபதி எனவும் உக்ரைன் இராணுவம் உறுதி செய்துள்ளது.
உக்ரைன் மீதான படையெடுப்பு
ட்ரோன் விமானங்களால் தளபதி அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், தற்போது அவர் உயிரிழந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உக்ரைன் மீதான படையெடுப்பு தொடங்கிய பின்னர் இதுவே அதிக தொலைவில் இருந்து துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட முதல் சம்பவம் என்றும் உக்ரைன் தெரிவித்துள்ளது.
ஆகவே, மரணம் எங்கிருந்து வேண்டுமானாலும் சீறிப்பாய்ந்து வரலாம் எனவும், இனி எதிரிகள் திணறுவார்கள் எனவும் உக்ரைன் தரப்பு குறிப்பிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |