தீவிரமடையும் போர் பதற்றம்! அணு ஆயுதப்படை ஒத்திகை ஆரம்பம்
ரஷ்ய இராணுவத்தின் அணு ஆயுத படைப்பிரிவினர் போர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக, கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணை சோதனை, கடல் பகுதியில் இருந்து ஏவுகணை செலுத்துவது உள்ளிட்ட போர் பயிற்சியில் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
உக்ரைன் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தினால், அதற்கு தயாராகும் வகையில் இந்தப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக, ரஷ்யா கூறியுள்ளது.
அணு ஆயுதங்களை பயன்படுத்த திட்டம்
இந்தப் போர் பயிற்சிகளை, அதிபர் புடின் பார்வையிட்டுள்ளதுடன், அவருக்கு, இராணுவ அமைச்சர் செர்ஜி ஷோய்கு பயிற்சி குறித்து விளக்கியுள்ளார்.
சீனா மற்றும் இந்திய இராணுவ அமைச்சர்களுடன், செர்ஜி ஷோய்கு தொலைபேசி வாயிலாக பேசியுள்ளதுடன், உக்ரைன் போர் நிலவரம் குறித்து அவர் விளக்கியுள்ளார்.
மேலும்,உக்ரைன் அணு ஆயுதங்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக அவர் கூறியதாக கூறப்படுகின்றது.