உக்ரைனுக்கு எதிராக திரும்பும் மேற்குலக நாடுகளின் ஆபத்தான ஆயுதங்கள்! தலைமை பொறுப்பில் மாற்றம் ஏற்படலாமென எச்சரிக்கை
உக்ரைன் தாக்குதலைத் தீவிரப்படுத்தி உள்ள நிலையில், ரஷ்யாவும் அதிரடி தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றது.
உக்ரைனின் ஆதரவு நாடுகள் வழங்கிய லியோபர்டு ரக டாங்கிகள், பிராட்லி போர் வாகனங்கள் உள்ளிட்டவற்றை தகர்த்துவிட்டதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ரஷ்யாவின் தாக்குதலை சமாளிக்க மேற்குலக நாடுகள் உக்ரைனுக்கு தொடர்ச்சியாக ஆயுதங்களை வழங்கிவரும் நிலையில், மேற்குலக நாடுகளாலேயே உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கொல்லப்படுவார் என்று ரஷ்ய முன்னாள் அதிபர் டிமிட்ரி மெட்வெடேவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், உக்ரைனில் குவிக்கப்படும் மேற்குலக நாடுகளின் ஆயுதங்களே உக்ரைனுக்கு எதிராக திரும்பும் என்றும் எச்சரித்துள்ளார்.
உக்ரைன் தலைமை பொறுப்பில் மாற்றம்
மேற்குலக நாடுகளிடம் இருந்து அதிகப்படியான பணம் மற்றும் ஆயுதங்களை உக்ரைன் வாங்கியுள்ளமையினால் அதனை நியாயப்படுத்த மீண்டும் எதிர்த்தாக்குதல் நடத்தியே ஆக வேண்டும் எனவும், உக்ரைன் தலைமையைப் பொறுப்பில் அமெரிக்கா வேறு ஒருவரையும் கூடக்கொண்டு வரக்கூடும். ஜெலென்ஸ்கியை ஒழித்துக்கட்டும்படி கட்டளையிட வாய்ப்பு உள்ளதாகவும் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
மேலும், 2014 இல் ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட கிரிமியாவை திரும்பப்பெற உக்ரைன் முயன்றால், இந்த போரினை பல ஆண்டுகள் நீட்டிக்க காரணமாக அமைந்துவிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |