உக்ரைன் - ரஷ்ய போருக்கான காரணத்தை முதன்முதலில் வெளியிட்ட புடின்
உக்ரைனில் ரஷ்யாவுக்கு சொந்தமான வரலாற்று சிறப்புமிக்க நிலத்தை மீட்கவே தமது இராணுவம் போராடி வருவதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான படையெடுப்பை ரஷ்யா மீண்டும் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், ரஷ்யாவின் ஏவுகணைகளால் உக்ரைன் அதிரும் வாய்ப்புகள் உள்ளதாக உக்ரைன் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் உக்ரைன் தாக்குதலுக்கு ஆதரவாக மாஸ்கோவில் அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட தேசபக்தி பேரணியில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையிலேயே புடின் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைனில் போராடும் இராணுவம்
நமது நிலம், நமது மக்களுக்கு உரிமையான நிலம், அதை மீட்கவே நமது இராணுவம் உக்ரைனில் போராடி வருகின்றது.
உக்ரைனில் போரிடும் நமது இராணுவத்தினர் மிகவும் வீரத்துடனும் ஆவேசத்துடனும், நமது நாட்டுக்காக போரிடுகிறார்கள், அவர்களின் வீரத்தை வணங்குகிறேன், அவர்களின் துணிவைக் கண்டு பெருமை கொள்கின்றேன் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில், உக்ரைனின் டான்பாஸ், மரியுபோல் ஆகிய பகுதிகளில் இருந்து சிறார்களை மேடையேற்றி ரஷ்யாவுக்கு ஆதரவாக முழக்கமிட வைத்துள்ளனர்.





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 4 நாட்கள் முன்

இந்த 3 சூழ்நிலைகள்... இந்தியாவிற்கு எதிராக மீண்டும் அணு ஆயுத மிரட்டல் விடுத்த பாகிஸ்தான் News Lankasri

3000 கி.மீ தூர இலக்கை தாக்கும் புதிய ஏவுகணை: உக்ரைன் கையில் கிடைத்த பயங்கர ஆயுதம்! நடுக்கத்தில் ரஷ்யா News Lankasri
