ரஷ்ய உயர்மட்ட அதிவேக ஏவுகணை விஞ்ஞானி தேசத்துரோக குற்றச்சாட்டில் கைது
ரஷ்ய உயர்மட்ட அதிவேக ஏவுகணை விஞ்ஞானி தேசத்துரோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தொழில்நுட்ப ஆய்வு பிரிவின் இயக்குனரான அலெக்சாண்டர் ஷிப்லியுக், ஹைப்பர்சோனிக் ஏவுகணை தொடர்பான இரகசிய தகவல்களை கசியவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் ராஸ்கோமாஸ் என்ற இடத்தில் விண்வெளி ஆய்வு மையம் உள்ளது. இங்கு ஒலியை மிஞ்சும் வேகம் கொண்ட ஹைபர்சானிக் விமான தயாரிப்பு ஆராய்ச்சி நடந்து வருகின்றது.
வெளிநாடுகளுக்கு விற்கப்படும் இரகசியங்கள்
இது குறித்த இரகசியங்களை சில விஞ்ஞானிகள் வெளிநாடுகளுக்கு விற்பதாக அரசுக்கு சந்தேகம் எழுந்த நிலையில், சீனாவின் பாதுகாப்புச் சேவைகளுடன் ஒத்துழைத்த குற்றச்சாட்டில் விஞ்ஞானி டிமிட்ரி கோல்கர் என்பவர் கைது செய்யப்பட்டு, பின்னர் உயிரிழந்துள்ளார்.
இதனை தொடர்ந்து, ஏவுகணைகள் தொடர்பான மாநில ரகசிய தரவை மாற்றியதாக அந்நிறுவனத்தின் தலைமை ஆராய்ச்சியாளர் அனடோலி மஸ்லோவ் கைது செய்யப்பட்டார்.