கொலைகாரரை உங்களுடன் அழைத்து கொள்ளுங்கள்! புடினின் பெற்றோர் கல்லறையில் எழுதிய பெண்
கொலைகாரரை உங்களுடன் அழைத்துக் கொள்ளுங்கள் என ரஷ்ய அதிபர் புடினின் பெற்றோர் கல்லறையில் எழுதிய பெண் கைது செய்யப்பட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவை சேர்ந்த பெண்மணி ஐரினா பனேவா (வயது 60) என்பவர், ரஷ்ய அதிபர் புடினின் பெற்றோர் கல்லறையில் எழுதிய வாசகம் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
அதில், உங்களுடன் உங்களது மகனையும் அழைத்து சென்று விடுங்கள் என குறிப்பு எழுதி வைத்து உள்ளார். போருக்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக அவர் இந்தக் கல்லறையை சேதப்படுத்தியுள்ளார் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஐரினா கைது செய்யப்பட்டுள்ளார்.
புடினின் பெற்றோர் கல்லறைக்கு பலத்த பாதுகாப்பு
புடினின் பெற்றோர் கல்லறைக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட போதும், அதில் இருந்து தப்பி கல்லறையை அவர் அடைந்து அந்த கல்லறையில், புடின் ஒரு கொலைகாரர் என்றும், அவரது மரணத்திற்காக ஒட்டுமொத்த உலகமும் பிரார்த்தனை செய்து வருகின்றதாகவும் அப்பெண் தெரிவித்துள்ளார்.
உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் 6 மாத கால போரில் ஆயிரக்கணக்கான உக்ரைனியர்கள் உயிரிழந்தும், பலர் படுகாயமடைந்தும் உள்ளனர். இலட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு விட்டு, அகதிகளாக புலம் பெயர்ந்து சென்றுள்ளனர்.
அத்துடன் கொலைகாரரின் பெற்றோரே, அவரை உங்களுடன் எடுத்து செல்லுங்கள். அவரால் எங்களுக்கு நிறைய வலி ஏற்பட்டு விட்டது என குறிப்பிட்டுள்ளார்.
தண்டனை அறிவிப்பு
இதனை அறிந்த கல்லறையின் பாதுகாவலர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் தெரிவித்து சி.சி.டி.வி. கமரா அடிப்படையில் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கல்லறையை அரசியல் ரீதியாக அல்லது பகைமைக்காக சேதப்படுத்தியதற்காக 5 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க கூடும் என கூறப்படுகின்றது.
பனேவாவுக்கு எதிர்வரும் நவம்பர் 8 ஆம் திகதி வரை வீட்டு காவல் விதிக்கப்பட்டு நீதிபதி தண்டனை அறிவித்துள்ளார். இணையதளம், தொலைபேசி அல்லது மெயில் ஆகியவற்றை பயன்படுத்துவதற்கு அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.