புடின் நிரந்தர தூக்கத்துக்கு அனுப்பப்படுவார்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
உக்ரைன் - ரஷ்ய போர் சுமார் கடந்த 10 மாதங்களாக நிலவி வரும் நிலையில் ரஷ்ய அதிபர் புடின் நிரந்தர தூக்கத்துக்கு அனுப்பப்படுவார், மீண்டும் அவர் எழுந்திருக்கவேமாட்டார் என முன்னாள் ரஷ்ய தூதர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஐ.நாவுக்கான முன்னாள் ரஷ்ய தூதரான Boris Bondarev என்பவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

புடின் பதவி விலக கட்டாயப்படுத்தப்படலாம்
புடினுடைய ஆட்சி பயங்கரமான முறையில் கவிழ்க்கப்படலாம் அல்லது அவர் கொல்லப்படலாம்.
உக்ரைனுடனான போரில் ரஷ்யா தோல்வியை சந்திக்குமானால், ரஷ்ய செல்வந்தர்களாலேயே நிரந்தர தூக்குத்துக்கு புடின் கொண்டு செல்லப்படுவார்.

தங்களிடம் பொய் சொல்லி புடின் தங்களை முட்டாள்களாகிவிட்டதாக ரஷ்ய மக்கள் கருதும் நிலையில் புடின் பதவி விலக கட்டாயப்படுத்தப்படலாம்.
இருப்பினும், தோல்வி பயத்தில் புடின், வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அணு ஆயுதங்களைப் பயன்படுத்த முடிவெடுக்கக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 12
148 தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளோம் - நேபாளத்திலிருந்து வீடியோ வெளியிட்ட தேச மங்கையற்கரசி News Lankasri