ரஷ்யாவின் அடுத்த இலக்காக மாறியுள்ள பிரித்தானியா! அரச அலுவலர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள உயிர் அச்சுறுத்தல்
எங்களின் அடுத்த இலக்கு பிரித்தானிய அரசு அலுவலர்கள் என ரஷ்ய ஜனாதிபதி புடினின் அரசியல் ஆதரவாளரான ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதியும், பாதுகாப்பு கவுன்சிலின் துணைத்தலைவருமான டிமிட்ரி மெத்வதேவ் (Dmitry Medvedev) இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
உக்ரைன் - ரஷ்ய போர் மீண்டும் தீவிரமடைந்து வரும் நிலையில், உக்ரைனுக்கு ஆதரவாக பிரித்தானியா ஆயுத உதவியை தொடர்ச்சியாக வழங்கி வரும் நிலையில், ரஷ்ய பிரித்தானியாவை கடுமையாக சாடியுள்ளது.

ரஷ்யாவுக்கெதிரான அறிவிக்கப்படாத போர்
இந்நிலையில், உக்ரைனுக்கு பிரித்தானியா வழங்கும் ஆதரவு, ரஷ்யாவுக்கெதிரான அறிவிக்கப்படாத போராக கருதுவதாக டிமிட்ரி மெத்வதேவ் தெரிவித்துள்ளார்.

இவர் டுவிட்டர் பதிவொன்றில் ‘‘ இன்று பிரித்தானியா உக்ரைனின் கூட்டாளி போல செயற்படுகின்றது. உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கி வருகின்றது. அது ரஷ்யாவுக்கெதிரான அறிவிக்கப்படாத போருக்கு சமம் என்றும் பதிவிட்டுள்ளார்.
ஆகவே, பிரித்தானியாவின் அரசு அதிகாரிகள், ரஷ்யாவின் இராணுவ இலக்காக கருதப்படக்கூடும் எனவும், ரஷ்யாவினால் அவர்கள் கொல்லப்படலாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri