பசியுடன் விளையாடும் ரஷ்யா! உலக நாடுகளுக்கு உக்ரைன் கடும் எச்சரிக்கை
உலகளாவிய உணவு பாதுகாப்பை அழிக்கும் உரிமை உலகில் எந்த நாட்டுக்கும் கிடையாது என உக்ரைன் தெரிவித்துள்ளது.
உக்ரைனின் கடல் துறைமுகங்களான ஒடிசா மற்றும் சோர்னோமோர்ஸ்க் மீது ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களை கொண்டு ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்நிலையில், கருங்கடல் தானிய ஒப்பந்தத்தில் இருந்து சமீபத்தில் ரஷ்யா விலகியுள்ளமை எண்ணற்ற நாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகின்றது.
ரஷ்யாவின் நடவடிக்கையால், உக்ரைனின் ஏற்றுமதியை சார்ந்திருக்கும் பல நாடுகள் நீண்ட காலம் அதற்காக காத்திருக்க கூடிய சூழல் எழுந்துள்ளது.
கருங்கடல் தானிய ஒப்பந்தம்
உக்ரைனிய விவசாயிகள் அடுத்த ஆண்டு குறைந்த அறுவடைகளை மேற்கொள்ளவும் திட்டமிட இது வழிவகுக்கும். இதனால், ரஷ்யா மீண்டும் இந்த ஒப்பந்தத்தில் இணைய முற்பட்டாலும் கோடிக்கணக்கான மக்களின் உணவு பாதுகாப்பின்மை தொடர்ந்து நீடிக்கும்.
இதுபற்றி உக்ரைன் வெளியிட்ட அறிக்கையில், இந்த ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா விலகியதிலிருந்து, உலகளாவிய உணவு பாதுகாப்பு பற்றிய அதன் உண்மையான நோக்கம் வெளிப்பட்டுள்ளது.
உலக மக்களின் பசியுடன் விளையாடும் விளையாட்டை ரஷ்யா நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் உலகளாவிய உணவு பாதுகாப்பை அழிக்கும் உரிமை உலகில் எந்த நாட்டுக்கும் கிடையாது என்றும் உக்ரைன் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |