ஒரே நாளில் 1140 ரஷ்ய வீரர்களை கொன்று குவித்த உக்ரைன்! வெளியான தகவல்
உக்ரைன் மீதான தாக்குதல்களை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ள நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் அத்துமீறிய தாக்குதலில் 1140 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் ஆயுதப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உக்ரைன் தலைநகர் கீவ் உட்பட பல்வேறு நகரங்கள் மீது ரஷ்ய படைகள் நேற்று குண்டு மழை பொழிந்த நிலையில் இதற்கு பதிலடியாக 1140 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
போர் தாக்குதல் ஓராண்டை கடக்க உள்ள நிலையில், புதிய தாக்குதலுக்காக உக்ரைன் எல்லை பகுதிகளில் ரஷ்யா கிட்டத்தட்ட 5,00,000 இராணுவ வீரர்களை மீண்டும் குவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உயிரிழப்பு எண்ணிக்கை
இந்நிலையில் உக்ரைன் மீதான அத்துமீறிய போர் தாக்குதல் தொடங்கிய நாள் முதல் இதுவரை சுமார் 1,36,880 ரஷ்ய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைனிய ஆயுதப்படை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
அத்துடன் கடந்த 24 மணி நேரத்தில் உக்ரைன் நடத்திய எதிர்ப்பு தாக்குதலில் சுமார் 1140 ரஷ்ய வீரர் கொல்லப்பட்டுள்ளனர்.
அத்துடன் நேற்றைய தினம் ரஷ்யா கூடுதலாக 9 டாங்கிகள், 3 ஆயுத கவச வாகனங்கள், 19 ஏவுகணை அமைப்புகள், 61 கப்பல் ஏவுகணை, 27 தந்திரோபாய-நிலை ஆளில்லா வான்வழி வாகனங்கள்(ட்ரோன்கள்) மற்றும் 8 டிரக்குகள் மற்றும் டேங்கர்கள் ஆகியவற்றை இழந்துள்ளதாக உக்ரைன் இராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது.