ரஷ்ய வீரர்களை கொன்று குவித்த உக்ரைன்! உண்மையை மறைக்கும் ரஷ்யா
உக்ரைன் மீதான படையெடுப்பு கடந்த வருடம் பெப்ரவரி மாதம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இருத்தரப்பினரும் எதிர்த்தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், உக்ரைனின் - மகீவ்கா நகரில் படைகள் நடத்திய தாக்குதலில் 300க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக பிரித்தானிய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இருப்பினும்,ரஷ்யா உண்மைத் தகவலை மறைத்துள்ளதாகவும் உண்மையான இறப்பு எண்ணிக்கை 300 தாண்டும் என்றும் பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் - மகீவ்கா நகரில் கடந்த 1ம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலில் 89 ரஷ்ய வீரர்கள் பலியானதாக ரஷ்யா அறிவித்த நிலையில் ரஷ்யா பலி எண்ணிக்கை தொடரர்பான உண்மைத் தகவலை மறைத்துள்ளதாகவும் இறப்பு எண்ணிக்கை 300ஐ தாண்டும் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.