வீரர்களின் உயிரிழப்பை மறைக்க ரஷ்யா சதி திட்டம்: கொத்து கொத்தாக எரிக்கப்படும் உடல்கள்
உக்ரைன் - ரஷ்ய போரில் உயிரிழந்த வீரர்களின் உயிரிழப்புகளை மறைக்க ரஷ்யா வீரர்களின் உடல்களை கிரிமியாவில் வைத்து இரகசியமாக எரிப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
இருநாடுகளுக்கு இடையிலும் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், இலட்சக்கணக்கான வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன்,வீரர்களின் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும், போர் நடவடிக்கைகள் நிறுத்தப்படுவதற்கான எந்த அறிகுறிகளும் இதுவரை காணப்படவில்லை எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பாக்முட் மற்றும் வுஹ்லேதார் நகரங்களை சுற்றி தீவிரமடையும் போர்
தற்போது உக்ரைன்- ரஷ்யா போரானது கிழக்கு உக்ரைனில் உள்ள பாக்முட் மற்றும் வுஹ்லேதார் நகரங்களை சுற்றி தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில் உக்ரைன் போரில் ஏற்பட்டுள்ள இராணுவ வீரர்களின் உயிரிழப்புகளை மறைக்க ரஷ்யா இறந்தவர்களின் உடல்களை ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட கிரிமியா பகுதியில் வைத்து தகனம் செய்வதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
இதற்காக கிரிமியாவின் க்ராஸ்னா சோர்கா(Krazna Zorka) கிராமத்தில் உள்ள உள்ளூர் தகனம் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், உடல்களை எரிப்பதற்காக நிலையான வாகனங்கள் எப்போதும் அங்கு காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, உக்ரைன் ரஷ்யா இடையிலான இந்த போர் நடவடிக்கையில் இதுவரை 1,39,770 ரஷ்ய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

125,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கற்கால மனிதர்கள் இயக்கிய தொழிற்சாலை ஜேர்மனியில் கண்டுபிடிப்பு News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri
