தீவிரமடையும் போர் பதற்றம்! 40க்கும் மேற்பட்ட நகரங்களில் ஏவுகணை தாக்குதல்
தமது நாட்டின் 40க்கும் மேற்பட்ட நகரங்கள் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பெப்ரவரி மாதம் போரை ஆரம்பித்த நிலையில் 8 மாதங்கள் கடந்த நிலையில் போர் தொடர்கின்றது.
இதனிடையே, போரில் உக்ரைனிடம் இருந்து ஆக்கிரமித்த லுஹான்ஸ்க், டோனெட்ஸ்க், கெர்சன், ஜபோரிஜியா ஆகிய 4 பிராந்தியங்களை தன்னுடன் இணைத்து கொள்வதாக அறிவித்த ரஷ்யா இது தொடர்பாக பொது வாக்கெடுப்பை நடத்தியது.
தீவிரமடையும் போர் பதற்றம்
இதன் பின்னர் இந்த பொது வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதாக கூறி அந்த 4 பிராந்தியங்களையும், தன்னுடன் இணைத்து கொண்டது.
ஆனால் சர்வதேச சட்டத்தை மீறும் செயல் என உலக நாடுகள் இதனை கண்டித்துள்ளன. இந்த நிலையில் உக்ரைனின் 4 பிராந்தியங்களை ரஷ்யா இணைத்ததை கண்டித்து ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
இந்த நிலையில் 40-க்கும் மேற்பட்ட நகரங்கள் மீது இன்று ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் உக்ரைன் விமானப்படையால் 25 ரஷ்ய இலக்குகள் மீது தாக்குதல்
நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.