உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய மோசமான போர்க்குற்றம்! அமெரிக்கா கடும் கண்டனம்
உக்ரைன் மீது போர்த்தொடுத்த ரஷ்யா மனிதகுலத்துக்கு எதிரான பல குற்றங்களைச் செய்துள்ளதாக அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.
ஜெர்மனியின் முனிச்சில் நடைபெற்ற மாநாட்டில் உரையாற்றிய அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ரஷ்யா போர்க்குற்றங்களைப் புரிந்ததில் எந்தவித சந்தேகமும் எழவில்லை என்று கூறியள்ளார்.
குண்டுத்தாக்குதல்
எந்தவிதத் தூண்டுதலும் இல்லாமல் உக்ரைன் மீது தொடுத்த போரில் ரஷ்யா போர்க் குற்றங்களை செய்திருப்பதற்கான ஆதாரங்களைப் பட்டியலிட்ட அவர், அப்பாவி மக்கள் மீது குண்டு வீசித் தாக்குதல் நடத்தியதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
உக்ரைனில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் ரஷ்யாவிற்கு வலுக்கட்டாயமாக நாடு கடத்தப்பட்டுள்ளனர். பல குழந்தைகள் தங்கள் குடும்பங்களிடம் இருந்து பிரிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், போர் தொடங்கிய முதல் நாளில் இருந்தே ரஷ்ய இராணுவத்தின் அத்துமீறல்களை நாம் கவனித்து வருகின்றோம். இது தொடர்பாக நமக்கு கிடைத்துள்ள ஆதாரங்கள், ரஷ்ய இராணுவம் உக்ரைனில் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களைச் செய்துள்ளது என்பதை நிரூபிக்கின்றது என கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.



