பற்றியெரியும் உக்ரைன் தானிய சேமிப்பு கிடங்குகள் ! ட்ரோன் தாக்குதலுக்கு ரஷ்யா கண்டனம்
உக்ரைனின் ஒடேசா பிராந்தியத்தின் தெற்கில் உள்ள துறைமுகம் மற்றும் தொழில்துறை வசதிகள் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதலை முன்னெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Izmail பகுதியை இலக்கு வைத்து ரஷ்ய ட்ரோன்கள் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உக்ரைன் விமானப்படை எச்சரித்திருந்தது.
இதில் தானிய சேமிப்பு கிடங்குகள் பல சேதமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.
தானிய சேமிப்பு கிடங்குகள் பல சேதமடைந்துள்ளதாக கூறப்படும் நிலையில், தற்போது அவசர சேவைகள் பிரிவு தாக்குதல் நடந்த பகுதியில் பணியாற்றி வருவதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.
முன்னதாக, மாஸ்கோ நகரில் உக்ரைன் தரப்பு ட்ரோன் தாக்குதலை முன்னெடுக்க, அதற்கு பழி தீர்க்கும் வகையில் ரஷ்யா தொடர் தாக்குதலை நடத்துவதாக கூறுகின்றனர்.