தீவிரமடையும் உக்ரைனின் ஆளில்லா விமான தாக்குதல்! ரஷ்யா விடுத்துள்ள கடும் எச்சரிக்கை
ரஷ்யாவின் முக்கிய நகரமான கிரிமீயா மற்றும் மாஸ்கோ நகரத்தின் மீது நடந்த உக்ரைனின் ஆளில்லா விமான தாக்குதலை தொடர்ந்து, தக்க பதிலடி கொடுக்கப்படும் என ரஷ்யா எச்சரித்துள்ளது.
ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள கிரிமீயா பகுதியில் வெடிபொருள் கிடங்கு மீது உக்ரைனின் ஆளில்லா விமானம் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் ஆளில்லா விமானம் ஒன்று வெடிபொருள் சேமித்து வைக்கும் கிடங்கு ஒன்றின் மீது தாக்குதல் நடத்தியுள்ளதுடன், அந்த பகுதியை சுற்றியுள்ள 5 கி.மீ. தொலைவில் உள்ள பொதுமக்களை பாதுகாப்புக்காக வெளியேற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்நிலையில், இது தொடர்பில் ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் அறிக்கையொன்றினை வெளியிட்டு கண்டனம் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
உக்ரைனின் ஆளில்லா விமான தாக்குதல்
கிரிமீயா மற்றும் மாஸ்கோ நகரத்தின் மீது நடந்த சமீபத்திய உக்ரைனின் ஆளில்லா விமான தாக்குதலை சர்வதேச அமைப்புகள் கண்டிக்க வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளது.
மேலும், உக்ரைன் - ரஷ்ய போர் சூழ்நிலையை மேற்கத்திய நாடுகள் தூண்டி விடுகின்றன என்றும் ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் குற்றம்சாட்டியுள்ளது.
உக்ரைனின் நடவடிக்கைகள் எல்லாம், பதற்றங்களை அதிகரிக்க செய்யும் மேற்கத்திய நாடுகளின் நோக்கங்களின் பாதிப்பாகவே உள்ளதென்றும் தெரிவித்துள்ளது.
கிரிமீயா மீது இரவு நேரத்தில் 17 ஆளில்லா விமானங்களை ஏவி உக்ரைன் பயங்கரவாத தாக்குதலை நடத்தியுள்ளதென்று குற்றம்சாட்டியுள்ளதுடன், கடுமையான பதிலடி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் உரிமை தங்களது தரப்புக்கு உள்ளது என்றும் ரஷ்யா தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |