உக்ரைனின் ஆளில்லா விமானங்களை சுட்டுவீழ்த்தி அதிரடி காட்டும் ரஷ்யா!
உக்ரைனின் 8 ஆளில்லா விமானங்களை ரஷ்ய படையினர் சுட்டு வீழ்த்தி பயங்கரவாத தாக்குதலை முறியடித்துள்ளதாக ரஷ்யா கூறியுள்ளது.
இது தொடர்பில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், உக்ரைன் அரசு இன்று காலை கிரிமீய தீபகற்ப பகுதியில் வான்வழியே 7 ஆளில்லா விமானங்கள் மற்றும் நீருக்கடியில் 2 ஆளில்லா விமானங்களை கொண்டு பயங்கரவாத தாக்குதல் நடத்திய நிலையில், அந்த முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது
கருங்கடல் பகுதியில் செவாஸ்தோபோல் துறைமுகத்தின் மீது நடத்தப்படவிருந்த தாக்குதலே இவ்வாறு தடுக்கப்பட்டுள்ளதாகவும் ரஷ்யா கூறியுள்ளது.
சேதவிபரங்கள்
இந்த எதிர் தாக்குதல் நடவடிக்கையின் போது வான்வழி மற்றும் நீருக்கடியில் எண்ணற்ற ஆளில்லா விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இதில் உயிரிழப்போ அல்லது பாதிப்புகளோ ஏற்படவில்லை என்றும் ரஷ்யா கூறியுள்ளது.
இவற்றில் 2 ஆளில்லா விமானங்கள், கடலோர பகுதியில் இருந்து சற்று தொலைவில் கருங்கடல் மீது சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன.
மேலும், 5 ஆளில்லா விமானங்கள் ரஷ்யாவின் மின்னணு போர் படைகளை கொண்டு இடைமறிக்கப்பட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |