ரஷ்ய ஆயுத கிடங்கை குண்டுவீசி தகர்த்த உக்ரைன் இராணுவம்! எதிர்தாக்குதலுக்கு தயாராகும் புடின்
ரஷ்ய இராணுவ கிடங்கை, தகர்த்து உக்ரைன் இராணுவம் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
உக்ரைன் நேட்டோவில் இணைவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா ஆரம்பித்த போர் 500 ஆவது நாளை எட்டியுள்ள நிலையில் ரஷ்ய இராணுவ கிடங்கை, உக்ரைன் இராணுவம் தகர்த்துள்ள நிலையில் ரஷ்யா தனது கடும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளது.
ஆக்கிரமிப்பு நிறுத்தம்
இந்நிலையில், ரஷ்யா கட்டுப்பாட்டிலிருந்த மகிவ்கா நகரில் இருந்த ரஷ்ய இராணுவ கிடங்கை, தகர்த்துள்ளதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது.
இது குறித்து உக்ரைன் இராணுவ தரப்பு கூறுகையில், பாதுகாப்பு படையினரின் துல்லியமான தாக்குதலால் மகிவ்கா பகுதியில், ரஷ்ய பயங்கரவாதிகளால் செய்யப்பட்ட ஆக்கிரமிப்பு நிறுத்தப்பட்டதாக உக்ரைன் இராணுவ பிரிவு தெரிவித்துள்ளது.
இதனிடையே, உக்ரைன் தலைநகரான கிவ் பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் பொதுமக்கள் 36 பேர் காயமடைந்ததாகவும், ஒருவர் உயிரிழந்ததாகவும் ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |