ரஷ்யாவை வடகொரியா போல் மாற்ற முனையும் சீனா! (VIDEO)
உக்ரைன் - ரஷ்ய போர் மீண்டும் தீவிரமடைந்து வரும் நிலையில் அடுத்து வரும் நாட்களில் களமுனையில் ஏற்படும் மாற்றங்கள் யுத்தத்தின் போக்கை தீர்மானிக்க கூடியதாக இருக்கும் என நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
உக்ரைன் - ரஷ்ய போர் ஆரம்பிப்பதற்கு முன்னர் சீனா மற்றும் ரஷ்ய ஜனாதிபதிக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் சீன - ரஷ்ய நட்பு எல்லையற்ற நட்பு என இரு நாடுகளும் அறிவித்திருந்தது.
இந்த அறிவிப்பினை தொடர்ந்து 20 நாட்களின் பின்னர் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலை மேற்கொண்டிருந்த நிலையில்,சீனா ரஷ்யாவின் தாக்குதலை ஆக்கிரமிப்பு என்ற சொல்லாடலிலும் பயன்படுத்தாது மௌனம் காத்திருந்தது.
இவ்வாறான நிலையில் ரஷ்யாவின் நடவடிக்கைக்கு எதிரான பல நாடுகள் எதிர்ப்பினை வெளியிட்டிருந்ததுடன்,பல பாருளாதார தடைகளையும் விதித்து ரஷ்யாவிற்கு தொடர்ச்சியாக அழுத்தங்களை பிரயோகித்திருந்தது.
இதன்போது ரஷ்யாவிற்கு ஆபத்பாண்டவனாக இருந்த மிக முக்கிய நாடான சீனா தற்போது ரஷ்யாவை மையப்படுத்தி நகர்த்தி வரும் காய்கள் தொடர்பில் ஆராய்கின்றது இன்றைய உண்மையின் தரிசனம்' நிகழ்ச்சி,