உக்ரைன் - ரஷ்ய போரில் மீ்ண்டும் பரபரப்பு! 24 மணிநேரத்தில் 600 உக்ரைன் துருப்புகள் அழிப்பு
உக்ரைன் - ரஷ்ய போர் மீ்ண்டும் தீவிரமடைந்து வரும் நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் 600க்கும் மேற்பட்ட உக்ரைன் துருப்புகள் அழிக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.
இதனை உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஒப்புக்கொண்டுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனின் எதிர்த்தாக்குதல் தீவிரமடைந்து வருவதன் காரணமாக, தனது துருப்புகள் முன்னணியில் கடினமான நேரத்தை எதிர்கொள்வதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த வீரர்களுக்கு மரியாதை
மேலும், கடந்த 24 மணிநேரத்தில் 600க்கும் மேற்பட்ட உக்ரைன் துருப்புகள் கொல்லப்பட்டுள்ளமையை உக்ரைன் ஒப்புக்கொண்டுள்ளதுடன், வீரர்களுக்கு மரியாதையை செலுத்துமாறும் ஜெலென்ஸ்கி ட்வீட் செய்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'உக்ரைனில் உள்ள நாம் அனைவரும் நம் மக்களின் வாழ்க்கையையும், நமது சுதந்திரத்தையும் காக்க எழுந்து நின்றவர்களுக்கு நம் வாழ்வில் கடமைப்பட்டுள்ளோம் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். நமது வீரர்களையும், அவர்களது குடும்பங்களையும் மதிக்க வேண்டும், அதேபோல் அரசைக் காக்க எழுந்து கணவன்மார்கள் மற்றும் மனைவிமார்களையும் மரியாதை செய்வது அவசியம். கண்டிப்பாக இவர்களுக்கு நன்றி கூறுவது அவசியம். உக்ரைனுக்கு நன்றியுடன் இருப்பது எப்படி என்று தெரியும். இது ஒவ்வொரு நாளும் காட்டப்பட வேண்டும்' என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |