புடின் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு! உக்ரைன் மற்றும் மேற்கு நாடுகளுக்கு ஏற்பட்டுள்ள கடும் நெருக்கடி
உக்ரைன் மீது ரஷ்யா போர் நடத்தி வரும் நிலையில் பெலாரஸ் நாட்டிற்கு அணு ஆயுதங்கள் அடுத்த மாதத்திற்குள் வழங்கப்படும் என ரஷ்ய ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு சர்வதேச அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவின் இந்த அறிவிப்பு காரணமாக உக்ரைன் மற்றும் மேற்கு நாடுகளுக்கு மேலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
மேற்கு நாடுகளுக்கு ஏற்பட்டுள்ள கடும் நெருக்கடி
உக்ரைனின் அண்டை நாடான பெலாரஸ் அதிபருடன், புதின் ஆலோசனை நடத்தியுள்ளதுடன், பெலாரஸ் நாட்டில் அணு ஆயுதங்களை வைப்பதற்கான கட்டமைப்புகள் ஜூலை மாத தொடக்கத்தில் நிறைவு பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த பணிகள் நிறைவு பெற்றவுடன் ரஷ்ய அணு ஆயுதங்கள் பெலாரஸ் நாட்டிற்கு வழங்கப்படும் என புடின் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் இந்த அறிவிப்பு, உக்ரைன் மற்றும் மேற்கு நாடுகளுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |