மேற்கத்திய நாடுகளின் நிறைவேறாத ஆசை! மீண்டும் சர்ச்சையை கிளப்பும் புடின்
மேற்கத்திய நாடுகளின் நிறைவேறாத ஆசையை நிறைவேற்றுவதற்காக எங்கள் நாடு மீது போர் திணிக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன் - ரஷ்ய போர் கடந்த ஓராண்டு காலமாக நீடித்து வரும் நிலையில், உக்ரைன் கிழக்கு பக்மூட் பகுதியை முழுவதுமாக கட்டுபாட்டுக்குள் கொண்டு வர ரஷ்யா தீவிர தாக்குதலை நடத்தியுள்ளது.
ரஷ்யாவிற்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள போர்
இந்நிலையில், இரண்டாம் உலகப்போரின் போது, ஜெர்மனியின் நாஜி படைகளை வீழ்த்தியதை குறிப்படும் வகையில், வெற்றி தினக் கொண்டாட்டம் நேற்று நடந்துள்ளது.
இதன்போது ''மேற்கத்திய நாடுகளின் நிறைவேறாத ஆசையை நிறைவேற்றுவதற்காக எங்கள் நாடு மீது போர் திணிக்கப்பட்டுள்ளது,'' என, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ரஷ்யாவிற்கு எதிராக போர் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதாகவும், அந்த போரை தமது வீரர்கள் வெற்றியாக மாற்றுவார்கள் என்றும் ரஷ்ய அதிபர் புடின் உறுதியளித்துள்ளார்.