ரஷ்யாவில் கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடித்த விஞ்ஞானி மர்மமாக கொலை!
ரஷ்யாவில் ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பில் முக்கிய பங்காற்றியதாக கூறப்படும் விஞ்ஞானி ஆன்ட்ரி போடிகோ பெல்டால் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
ரஸ்யாவில் கொரோனா பரவல் தடுப்பு மருந்தான ஸ்புட்னிக், கடந்த 2020ம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவை சேர்ந்த 47 வயதான வைராலஜிஸ்டான ஆன்ட்ரி போடிகோவும் என்ற விஞ்ஞானியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கொலை வழக்கு பதிவு
கடந்த 2021ம் ஆண்டில் ரஷ்ய அதிபர் புதின், ரஷ்யாவின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான Order of Merit for the Fatherland விருது அளித்து கௌரவித்தார்.
மாஸ்கோவில் உள்ள குடியிருப்பில் வசித்து வந்த அவர், கடந்த வியாழக்கிழமை மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதனையடுத்து விசாரணையில், அவர் இருதரப்பு தகராறில் பெல்டால் கழுத்து இறுக்கி கொலை செய்யப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து கொலை வழக்காக பதிவு செய்து, 29 வயது இளைஞரை சந்தேகத்தின்பேரில் பிடித்து ரஷ்ய பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 21 மணி நேரம் முன்
படப்பிடிப்பு தொடங்கும் முன்பே விஜய் சேதுபதி-மணிரத்னம் பட வியாபாரம் முடிந்தது... இத்தனை கோடியா? Cineulagam
பராசக்தி பட சம்பளம் பாக்கி.. வழக்கு தொடர்ந்த இயக்குநர் சுதா கொங்கரா.. வெளிவருமா இதயம் முரளி Cineulagam
ஜூலை 14 முதல் அஸ்தமிக்கும் குரு பகவான் : இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போவது உறுதி! Manithan