ரஷ்யாவின் ஏவுகணைகளால் உக்ரைன் அதிரும்! உளவுத்துறை விடுத்துள்ள எச்சரிக்கை
ரஷ்யா - உக்ரைன் மீது போர் தாக்குதலை தொடங்கி ஓராண்டு பூர்த்தியாகவுள்ள நிலையில் உக்ரைன் உளவுத்துறை முக்கிய அறிவிப்பொன்றினை விடுத்துள்ளது.
உக்ரைன் மீதான படையெடுப்பை ரஷ்யா மீண்டும் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், ரஷ்யாவின் ஏவுகணைகளால் உக்ரைன் அதிரும் வாய்ப்புகள் உள்ளதாக உக்ரைன் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யாவின் படை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு நாளை ஓராண்டு நிறைவடையும் நிலையில், ரஷ்யா தமது படை நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது.
ரஷ்யா ஏவுகணை சோதனை தோல்வி
அணு வல்லமை கொண்ட சர்மாட் என்ற கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை நிலைநிறுத்தவுள்ளதாக ரஷ்ய அதிபர் அண்மையில் வெளியிட்ட அறிவிப்பானது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சர்மாட் 2 என அழைக்கப்படும் கண்டம் விட்டு கண்டம் பாயும் திரவ எரிபொருள் ஏவுகணையை இவ்வாண்டு நிலைநிறுத்தப் போவதாக விளாடிமீர் புடின் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், ஜோபைடன் வருகையின் போது ரஷ்யா ,கண்டம் விட்டு கண்டம் தாவும் சடான் -2 எனப்படும் ஏவுகணையை ரஷ்யாவின் மேற்கு மாகாணத்தில் உள்ள ஏவுதளத்திலிருந்து விண்ணில் செலுத்தி பரிசோதனை நடத்தியதாகவும், அந்த பரிசோதனை தோல்வியில் முடிந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.