உக்ரைனில் அடுத்த சில தினங்களில் தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டம்! களமிறக்கப்படும் 5 இலட்சம் படை வீரர்கள்
உக்ரைன் - ரஷ்ய போர் மீண்டும் தீவிரமடைந்து வரும் நிலையில் உக்ரைனில் அடுத்த சில தினங்களில் மிக பெரிய தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தாக்குதலுக்கு ஜீரோ டே என புடின் பெயரிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
அச்சத்தில் உலக நாடுகள்
மேலும், இந்த தாக்குதலுக்காக சுமார் ஆயிரத்து 800 டேங்குகள், 700 விமானங்கள், 5 இலட்சம் படை வீரர்களைத் திரட்டி வருவதாகவும், இன்னும் 10 நாட்களில் இந்தத் தாக்குதல் தொடங்கக்கூடும் என்றும் அமெரிக்க செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்காக ரஷ்யா ஏராளமான அளவில் வெடிமருந்துகளை சேமித்து வைத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. போர் பதற்றத்திற்கு மத்தியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கி மற்றும் சிரியாவுக்கு உதவுவதற்காக உக்ரைன் வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறான நிலையில், ரஷ்யாவின் தாக்குதல் தொடர்பில் தகவல் கசிந்துள்ளமையினால் உலக நாடுகள் பெரும் அச்சத்தில் உள்ளதாக கூறப்படுகின்றது.