ஐரோப்பிய நாடுகள் மீது பறந்த ரஷ்ய ஏவுகணைகள்! அச்சத்தில் உலக நாடுகள்
உக்ரைன் - ரஷ்ய போர் தீவிரமடைந்து வரும் நிலையில் ரஷ்யாவின் 2 இராணுவ ஏவுகணைகள் ருமேனியா மற்றும் மால்டோவாவை கடந்து சென்றதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
இன்று ரஷ்யாவின் இராணுவ ஏவுகணைகள் இரண்டு உக்ரைனுக்குள் நுழைவதற்கு முன் ரோமானியா மற்றும் மால்டோவன் ஆகிய நாடுகளின் வான்வெளிக்குள் நுழைந்ததாக உக்ரைனிய உயர்மட்ட ஜெனரல் தெரிவித்துள்ளார்.
உக்ரைனின் திட்டம்
கருங்கடலில் இருந்து ஏவப்பட்ட இந்த இரண்டு காலிபர் ஏவுகணைகள் உக்ரைனுக்குள் நுழைவதற்கு முன்பு மால்டோவன் வான்வெளியில் நுழைந்து, பின் ருமேனிய வான்வெளியில் பறந்ததாக உக்ரைனின் ஆயுதப்படைகளின் தலைமைத்தளபதி வலேரி ஜலுஷ்னி தெரிவித்துள்ளார்.
அத்துமீறி நுழைந்த ரஷ்ய இராணுவ ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தும் திறன் உக்ரைனிடம் உள்ளது, ஆனால் வெளிநாடுகளில் உள்ள பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் அந்த திட்டத்தை உக்ரைன் கைவிட்டதாக உக்ரைன் தரப்பிலிருந்து குறிப்பிடப்பட்டுள்ளது.