போர் விமானங்களை அனுப்பினால்..! மேற்கத்திய நாடுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள ரஷ்யாவின் அறிவிப்பு
உக்ரைன் - ரஷ்ய போர் தீவிரமடைந்து வரும் நிலையில் மேற்கத்திய நாடுகளை ரஷ்யா மீண்டும் எச்சரித்துள்ளது.
உக்ரைன் பல நாடுகளிடம் ஆயுத உதவி கோரி வரும் நிலையில் உக்ரைனுக்கு பிரித்தானியா அல்லது மேற்கத்திய நாடுகள் போர் விமானங்களை அனுப்பினால் உக்ரைன் மக்களே பாதிக்கப்படுவர் என ரஷ்யா எச்சரித்துள்ளது.
ரஷ்யாவுக்கு எதிரான போரில் போர் விமானங்கள், ஏவுகணைகளை கோரி, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு திடீர் பயணம் மேற்கொண்டிருந்தார்.
இந்நிலையில்,உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் என்ன ஆயுதங்களை வழங்கினாலும் ரஷ்யா இராணுவ தாக்குதலை முன்னெடுக்கும் என்றும், போர் விமானங்களை தருவது உக்ரைன் மக்களுக்கு வலியையும் துன்பத்தையும் மட்டுமே தரும் என்றும் எச்சரித்துள்ளது.