தண்டனை அனுபவிப்பார்கள்! ரஷ்யாவின் கடும் எச்சரிக்கையினால் உக்ரைனுக்கு உதவ நேட்டோ நாடுகள் தயக்கம்
மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு பீரங்கிகளை வழங்கினால், அதற்கான தண்டனையை உக்ரைன் மக்கள் அனுபவிப்பார்கள் என ரஷ்யா எச்சரித்துள்ளது.
கரடு முரடான பாதைகளில் கூட மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய லியோபர்டு கவச பீரங்கிகளை உக்ரைனுக்கு வழங்க ஜெர்மனி தொடர்ந்து தயக்கம் காட்டிவருகின்றது.
இருப்பினும் அமெரிக்கா, பித்தானியா போன்ற நாடுகள் வலியுறுத்தியும் ஜெர்மனி தயக்கம்காட்டுவது, நேட்டோ நாடுகளியே நிலவிவரும் குழப்பத்தை பிரதிபலிப்பதாக ரஷ்யா விமர்சித்துள்ளது.
நேட்டோ நாடுகள் தயக்கம்
இதற்கிடையில் உக்ரைனுக்கு லெக்லெர்க் (Leclercs) டாங்கிகளை அனுப்புவதற்கான வாய்ப்பை பிரான்ஸ் மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் கூட்டு செய்தியாளர்கள் மாநாட்டில் உக்ரைனுக்கு டாங்கிகள் அனுப்புவதை பிரான்ஸ் நிராகரிக்கவில்லை என்று அந்த நாட்டின் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
மேலும் டாங்கிகளை அனுப்புவது போர் நிலைமையை அதிகரிக்காமல் இருக்க வேண்டும், அத்துடன் உக்ரைனியர்களுக்கு திறம்பட பயிற்சி அளிப்பதற்கான நேரத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மக்ரோன் குறிப்பிட்டுள்ளார்.