தீவிரமடையும் வெடிகுண்டு தாக்குதல் !ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்துமஸ் பிரார்த்தனையில் ரஷ்ய அதிபர்
ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி, கிரெம்ளினில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பிரார்த்தனை செய்துள்ளார்.
உக்ரைன் உளவுத்துறை தலைவர் Kyrylo Budanov, அதிபர் புதின் நோய்வாய்பட்டுள்ளதாகவும், அவர் விரைவில் உயிரிழக்கக்கூடும் என தெரிவித்த நிலையில், புதின் பிரார்த்தனை செய்த காட்சிகளை ரஷ்ய அரசு ஊடகம் வெளியிட்டுள்ளது.
அதேநேரம், கடந்த ஆண்டு ஈஸ்டர் பண்டிகையை, கதீட்ரல் தேவாலயத்தில், பல்லாயிரக்கணக்கானோருடன் கொண்டாடிய புதின், தற்போது தனி ஒருவராக கிரெம்ளினில் நடைபெற்ற பிரார்த்தனையில் பங்கேற்றுள்ளார்.
இதேவேளை,போர் நிறுத்தத்தின் போது உக்ரைனிய ஆயுத படைகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி வருவதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் குற்றம்சாட்டியுள்ளது.
இந்த நிலையில் உக்ரைனில் உள்ள ரஷிய படைகள், தளவாடங்கள் மீது உக்ரைனிய ஆயுத படைகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி வருவதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.