ரஷ்ய பெண் கைதிகளை களமிறக்கும் புடின்! இரகசிய திட்டம் அம்பலம்
ரஷ்ய சிறையில் உள்ள பெண் கைதிகளை உக்ரைன் போரில் ஈடுபடுத்த ரஷ்ய அதிபர் புடின் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்ய அதிபர் புடினின் நெருங்கிய நண்பரான எவ்ஜெனி பிரிகோஜின் இந்த தகவலை வெளியிட்டுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவில் உள்ள பெண் கைதிகளை துப்பாக்கி சுடும் வீராங்கனைகளாகவும், எதிரி நாட்டை பலவீனப்படுத்தும் வகையிலான பாலங்கள், ரயில்வே தண்டவாளம் உள்ளிட்ட கட்டமைப்புகளை தாக்கி அழிக்கும் பணிக்காகவும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளார்.
இரகசிய திட்டம் அம்பலம்
இது தொடர்பில் பெண் கைதிகள் குழு ஒன்று பிரிகோஜினை சந்தித்துள்ளதாகவும், அவர்கள் உக்ரைனில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தொலைதொடர்பு பணியாளர்களாக வேலை செய்ய பயிற்சி பெற்றுள்ளனர் எனவும் பிரிகோஜின் கூறியுள்ளார்.
அத்துடன், பெண் கைதிகள் உக்ரைனில் தாக்குதல் நடத்தும் நபர்களாகவும் செயற்படவுள்ளனர்.
ரஷ்ய படை வீரர்கள் எண்ணிக்கையை 15 இலட்சம் ஆக விரிவுப்படுத்த பாதுகாப்பு மந்திரி செர்கெய் ஷொய்கு முன்மொழிந்த நிலையில் அதிபர் புடினின் புதிய திட்டம் பற்றிய இந்த தகவல் வெளிவந்துள்ளது.