உக்ரைனுக்குள் ரஸ்யாவின் ஆக்கிரமிப்பு ஆரம்பம்! அவசரமாக கூடிய ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை! (வீடியோ)
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு ஏற்கனவே ஆரம்பித்து விட்டது.
எனவே ரஷ்யாவுக்கு எதிராக இங்கிலாந்து பொருளாதார தடைகளை விதிக்கும் என்று இங்கிலாந்தின் சுகாதார செயலாளர் சஜித் ஜாவிட் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ரஷ்யா ஏற்கனவே உக்ரைனுக்குள் போர் தாங்கிகள் மற்றும் துருப்புக்களை அனுப்பியுள்ளதாகவும் இங்கிலாந்து சுகாதார செயலாளர் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பாவில் இன்று மிகவும் இருண்ட நாளாக கருதப்படுகிறது. ரஷ்யாவின் ஜனாதிபதி புடின் யுக்ரைனின் இறையாண்மை மற்றும் அதன் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிராக தாக்குதல் நடத்த முடிவு செய்துள்ளார்.இது "ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று ஜாவிட் குறிப்பிட்டார்.
உக்ரைனில் இருந்து பிரிந்து சென்ற கிழக்குப் பகுதிகளை புடின் அங்கீகரித்துள்ளமையானது, அவர் தாங்கிகள் மற்றும் துருப்புக்களை உக்ரைனுக்குள் அனுப்பியதாகவே கருதவேண்டும்.
இந்தநிலையில் உக்ரெய்ன் மீது ரஸ்யாவின் படையெடுப்பு ஆரம்பமாகி விட்டது என்று கூறமுடியும் என ஜாவிட் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன், யுக்ரைன் தொடர்பாக இன்று நாடாளுமன்றத்தில் அறிக்கை அளிப்பார் என இங்கிலாந்து அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை யுக்ரெய்ன் பதற்றம் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை அவசரமாக பின்னிரவு கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தியுள்ளது.
இதன்போது அமெரிக்கா உட்பட்ட நாடுகளின் ரஸ்ய ஜனாதிபதியின் அறிவிப்பை கண்டித்துள்ளனர்.
எனினும் ரஸ்யாவின் துாதுவர், மேற்கத்தைய நாடுகள் மீது தமது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.