லெபனான் போர்நிறுத்தத்திற்கு இணங்க ஈரான் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
போர்நிறுத்தத்தின் எஞ்சிய காலத்திற்கு ஹோர்முஸ் நீரிணை "முழுமையாகத் திறக்கப்படும்" என்று ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி அறிவித்துள்ளார்.
இது குறித்து ஈரான் வெளிவிவகார அமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில், லெபனான் போர்நிறுத்தத்திற்கு இணங்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர்நிறுத்தம்
இதன்படி, போர்நிறுத்தக் காலப்பகுதியில் ஈரானினால் அறிவிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கடல்வழிப் பாதையூடாக, அனைத்து வர்த்தகக் கப்பல்களும் ஹோர்முஸ் நீரிணையை கடந்து செல்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
In line with the ceasefire in Lebanon, the passage for all commercial vessels through Strait of Hormuz is declared completely open for the remaining period of ceasefire, on the coordinated route as already announced by Ports and Maritime Organisation of the Islamic Rep. of Iran.
— Seyed Abbas Araghchi (@araghchi) April 17, 2026
அத்துடன், ஈரான் கடற்பரப்பில் அமைந்துள்ள சர்வதேச ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) தற்போது முழுமையாகத் திறக்கப்பட்டுள்ளதாகவும், கப்பல் போக்குவரத்துப் பயன்பாட்டிற்கு அது தயாராக இருப்பதாகவும் ஈரான் அறிவித்துள்ளதாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
மயில் விஷயத்தில் பாண்டியன் எடுத்த முடிவு, சிக்கிய கதிர்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
புனிதா சீரியலை தொடர்ந்து சன் டிவியில் முடிவுக்கு வரப்போகும் இன்னொரு சீரியல்... வருத்தத்தில் ரசிகர்கள் Cineulagam