உக்ரைன் போரில் நாள்தோறும் இலக்கு வைக்கப்படும் சிறுவர்கள்! (photos)
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பின் போது கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
உக்ரைனின் மனித உரிமைகள் ஆணையரின் தகவல்படி, நேற்று வரை பல குழந்தைகள் உட்பட, 210 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறந்தவர்களில் பொலினா என்ற சிறுமி, தலைநகர் கீவில் ஆரம்பப் பாடசாலையில் இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்தாள்.
உக்ரெய்ன், தலைநகரின் வடமேற்கில் ஒரு தெருவில் அவரும் அவரது பெற்றோரும் ரஷ்ய நாசவேலை மற்றும் உளவுக் குழுவால் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு மழலையர் பாடசாலை மீதான தாக்குதலில் ஏழு வயது சிறுமி இறந்துள்ளார்.
தெற்கில் கிராமங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் உக்ரைனின் இன கிரேக்க சமூகத்தைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டனர்.