பதற்றத்தை தணிக்க, 48 மணித்தியாலங்களுக்குள் ரஸ்யாவிடம் சந்திப்பை கோரியுள்ள உக்ரெய்ன்!
தமது நாட்டு எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிப்பதற்காக 48 மணித்தியாலங்களுக்குள் ரஸ்யாவுடன் சந்திப்பு ஒன்றை உக்ரெய்ன் கோரியுள்ளது.
இந்த சந்திப்பில் ஐரோப்பிய பாதுகாப்பு குழுவின் ஏனைய உறுப்பு நாடுகளும் பங்கேற்கவேண்டும் என்று யுக்ரெய்னின் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா (Dmytro Kuleba) கோரியுள்ளார்.
உக்ரைனின்; எல்லையில் சுமார் 100000 வீரர்கள் குவிக்கப்பட்ட போதிலும் அந்த நாட்டின் மீது படையெடுப்பதற்கான எந்த திட்டத்தையும் ரஸ்யா மறுத்து வருகிறது.
எனவே ரஸ்யாவின் வெளிப்படைத்தன்மையை கண்டறியும் வகையிலேயே இந்த சந்திப்பை கோருவதாக யுக்ரேய்ன் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஐரோப்பாவில் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்புக்கான அமைப்பின் உறுப்பினர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்த உடன்படிக்கையான வியன்னா ஆவணத்தின் விதிகளின் கீழ் ரஸ்யாவிடம் இருந்து பதில்களை கோரியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை பத்துக்கும் மேற்பட்ட நாடுகள் உ யுக்ரைனை விட்டு வெளியேறுமாறு தங்கள் குடிமக்களை வலியுறுத்தியுள்ளன. அடுத்த 48 மணி நேரத்திற்குள் தலைநகர் கியோவில் இருந்து அனைத்து தூதரக பணியாளர்களையும் திரும்பப் பெற அமெரிக்கா தயாராகி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை பல்வேறு கூற்றுக்களால் பரவக்கூடிய "பீதியை" விமர்சித்துள்ள யுக்ரைனின் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelensky)வரும் நாட்களில் ரஸ்யாää ஒரு படையெடுப்பைத் திட்டமிடுகிறது என்பதற்கு தன்னிடம் எந்த ஆதாரமும் இல்லை என்று கூறியுள்ளார்
நேற்று ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி ஜெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்; தொலைபேசியில் சுமார் ஒரு மணி நேரம் பேசினார்.
இதன்போது யுக்ரைனுக்கான அமெரிக்க ஆதரவை ஜனாதிபதி பைடன் மீண்டும் வலியுறுத்தியதாகவும் இராஜதந்திரம் மற்றும் எதிர்ப்புகளை தொடர்ந்து தொடர்வதன் முக்கியத்துவம் குறித்து இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டதாகவும் வெள்ளை மாளிகை கூறியது.



