புலம்பெயர்தலை கட்டுப்படுத்த தீவிரமாக செயற்படும் பிரித்தானியா
சட்டவிரோத புலம்பெயர்வோர் எண்ணிக்கையைத் குறைக்கும் முயற்சியில் முன்பு ஈடுபட்டிருந்த பிரித்தானிய அரசு, தற்போது, சட்டப்படி புலம்பெயர்வோர் எண்ணிக்கையையும் கட்டுப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக செயற்பட்டு வருகிறது.
புலம்பெயர்தல் அமைப்பை தவறாக பயன்படுத்தி பிரித்தானியாவுக்கு வர முயல்வோரைக் கட்டுப்படுத்தும் வகையில் அறிமுகமாகவுள்ள பல்வேறு கட்டுப்பாடுகள் குறித்து பிரித்தானிய பிரதமரும் உள்துறைச் செயலரும் கடந்த டிசம்பரில் அறிவிப்புகள் வெளியிட்டிருந்தார்கள்.
நேற்றுமுன்தினத்திலிருந்து (11.03.2024) முதியவர்கள், நோயாளிகளை கவனித்துக்கொள்ளும் பணி செய்யும் வெளிநாட்டவர்கள் (care workers), தங்கள் குடும்பத்தினரை பிரித்தானியாவுக்கு அழைத்துவர, தடை நடைமுறைக்கு வந்துள்ளது.
மேலும், ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி முதல், திறன்மிகுப் பணியாளர்கள் விசாவில் வருபவர்களுக்கான குறைந்தபட்ச வருமான வரம்பு, 26,200 பவுண்டுகளில் இருந்து 38,700 பவுண்டுகளாக உயர்த்தப்பட உள்ளது.
அத்துடன், ஏப்ரல் மாதம் 11ஆம் திகதி முதல், குடும்ப விசா பெறுவதற்கான குறைந்தபட்ச வருமான வரம்பு 29,000 பவுண்டுகளாக உயர உள்ளதுடன், அது படிப்படியாக 38,700 பவுண்டுகள் வரை அதிகரிக்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா





திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri

குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

பிரம்மாண்டமாக தயாராகும் அல்லு அர்ஜுன்-அட்லீ படத்தில் சிறப்பு வேடத்தில் பிரபல நடிகர்... யார் தெரியுமா? Cineulagam

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
