பிரித்தானியாவின் பயணக் கட்டுப்பாடுகளில் தளர்வு! - 47 நாடுகள் சிவப்பு பட்டியலில் இருந்து நீக்கம்
பிரித்தானியாவின் கோவிட் அச்சுறுத்தல் நிறைந்த சிவப்பு பட்டியலில் உள்ள நாடுகளின் எண்ணிக்கை 54இல் இருந்து 7 ஆக குறைக்கப்படும் என்று அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
தென்னாப்பிரிக்கா, பிரேசில் மற்றும் மெக்ஸிகோ உள்ளிட்ட நாடுகள் சிவப்பு பட்டியலில் இருந்து நீக்கப்படுகின்றது, இந்த நாடுகளில் இருந்து வரும் பயணிகள் 10 நாட்களுக்கு ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.
இந்த நடைமுறை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அமுலுக்கு வரும் என போக்குவரத்துச் செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் (Grant Shapps) அறிவித்துள்ளார். அரசின் இந்த அறிவிப்பு விமானத் தொழில் மற்றும் தொற்றுநோய்களின் போது பிரிந்த குடும்பங்களுக்கு ஊக்கமாக இருக்கும் என கருதப்படுகின்றது.
பனாமா, கொலம்பியா, வெனிசுலா, பெரு, ஈக்வடோர், ஹைட்டி மற்றும் டொமினிகன் குடியரசு ஆகியவை சிவப்பு பட்டியலில் உள்ள நாடுகளாகும்.
பிரித்தானியாவில் அண்மையில் பயணக் கட்டுப்பாட்டு விதிகள் தளர்த்தப்பட்டன. இதன்படி, 32 நாடுகளுக்கு விடுமுறைக்கு எதிரான ஆலோசனை மாற்றப்பட்டது.
அத்துடன், 37 இடங்களிலிருந்து வருபவர்களுக்கு அவர்களின் தடுப்பூசி சான்றிதழ்கள் அங்கீகரிக்கப்படுவதுடன், பயணிகள் வருகைக்கு பிந்தைய சோதனை தேவைகளையும் தவிர்க்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சிவப்பு பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 47 நாடுகளின் விபரங்கள்......
ஆப்கானிஸ்தான், அங்கோலா, அர்ஜென்டினா, பொலிவியா, போட்ஸ்வானா, பிரேசில், புருண்டி, கேப் வெர்டே, சிலி, காங்கோ (ஜனநாயக குடியரசு), கோஸ்டாரிகா, கியூபா. எரித்திரியா, ஈஸ்வதினி, எத்தியோப்பியா, பிரெஞ்சு கயானா, ஜோர்ஜியா, கயானா, இந்தோனேசியா, லெசோதோ, மலாவி, மயோட், மெக்சிகோ, மங்கோலியா, மாண்டினீக்ரோ, மொசாம்பிக், மியான்மார், நமீபியா, நேபாளம், பராகுவே, பிலிப்பைன்ஸ், ரியூனியா, சிரியலே, சியோலியா தென்னாப்பிரிக்கா, சூடான், சுரினாம், தான்சானியா, தாய்லாந்து, டிரினிடாட் மற்றும் டொபாகோ, துனிசியா, உகாண்டா, உருகுவே, சாம்பியா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகளாகும்.