இலங்கை செல்லும் பிரித்தானிய பிரஜைகளுக்கு வெளியான முக்கிய தகவல்
இலங்கைக்கு வருகை தரும் பிரித்தானிய குடிமக்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் புதிய பயண ஆலோசனைகளை வெளியிட்டுள்ளது.
தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு பிரித்தானிய அரசாங்கம் இந்த தொடர் அறிவுறுத்தல்களை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு, மருந்து, உணவு மற்றும் எரிபொருள் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும், தினசரி மின்வெட்டு இருப்பதாகவும் பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
எனவே, இலங்கைக்கு விஜயம் செய்ய திட்டமிட்டிருந்தால் பொருத்தமான பயணக் காப்புறுதியைப் பெற்று, அது போதிய பாதுகாப்பை வழங்குகிறதா என்பதைச் சோதிப்பது முக்கியம் என பிரித்தானிய அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
பொருளாதார நெருக்கடிக்கு எதிராக இலங்கையில் போராட்டங்களை கலைக்க கண்ணீர் புகை மற்றும் நீர் பிரயோகம் பயன்படுத்துவதால், அவ்வாறான இடங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறும், இலங்கைக்கு விஜயம் செய்யும் பிரித்தானிய மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
உள்ளூர் ஊடகங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் பயண ஆலோசனைகள் மற்றும் அறிவிப்புகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுமாறும் பிரித்தானிய அரசாங்கம் தங்கள் பிரஜைகளுக்கு அறிவித்துள்ளது.

கடலுக்கு அடியில் மிகப்பெரிய ஜாக்பாட்டை கண்டுபிடித்த இந்தியாவின் நட்பு நாடு.., ஆனால் ஒரு சிக்கல் News Lankasri

43 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் அனுஷ்கா.. காதலனை பற்றி முதல் முறையாக கூறிய நடிகை Cineulagam
