ரஷ்ய ஜனாதிபதிக்கு தடை! - பிரித்தானியா அதிரடி அறிவிப்பு
உடன் நடைமுறைக்கு வரும் வகையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ஆகியோருக்கு எதிராக பிரித்தானியா தடைகளை அறிமுகப்படுத்தும் என்று போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.
எனினும், அவர்களுக்கு எதிராக எவ்வாறான தடைகள் விதிக்கப்படும் என்பதை பிரித்தானிய பிரதமர் கூறவில்லை. என்றாலும், ஐரோப்பிய ஒன்றியம் இவர்களுக்கு எதிரான சொத்து முடக்கத்தை கொண்டுவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த இரண்டாவது நாளில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், ரஷ்ய ஜனாதிபதி புடினின் ஆக்கிரமிப்புச் செயல் தோல்வியடைவதை உலகம் உறுதி செய்ய வேண்டும் என்று பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் கூறியுள்ளார்.