இந்தியப் பெருங்கடலில் மூலோபாய முக்கியத்துவத்தை வெளியிட்ட விட்டுக்கொடுக்கும் பிரித்தானியா
அரை நூற்றாண்டுக்கும் மேலாக இந்தியப் பெருங்கடலில் உள்ள தொலைதூர மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த தீவுகளின் இறையாண்மையை விட்டுக் கொடுப்பதாக இங்கிலாந்து அறிவித்துள்ளது.
பல வருட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு சாகோஸ் தீவுகளை மொரிஷியஸிடம் ஒப்படைக்கும் தீர்மானத்தை இங்கிலாந்து வெளியிட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் – வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாக கருதப்படுகிறது.
டியாகோ கார்சியா
இதில் டியாகோ கார்சியாவும் அடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது அமெரிக்க அரசாங்கத்தால் அதன் கடற்படை கப்பல்கள் மற்றும் நீண்ட தூர குண்டுவீச்சு விமானங்களுக்கான இராணுவ தளமாக பயன்படுத்தப்படுகிறது.
பிரித்தானியா மற்றும் மொரிஷியஸ் பிரதமர்களின் கூட்டறிக்கையில் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு, தீவுகள் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பல தசாப்தங்களாக குழப்பமான பேச்சுவார்த்தைகளை முடிவுக்குக் கொண்டுந்துள்ளன.
அமெரிக்கா - பிரித்தானியா
டியாகோ கார்சியாவில் இருக்கும் அமெரிக்கா மற்றும் பிரித்தானிய தளங்களை விடுவித்த மேற்கத்திய நாடுகள், இந்தியா மற்றும் சீனா இடையே பிராந்தியத்தில் வளர்ந்து வரும் புவிசார் அரசியல் போட்டிகளின் நேரத்தில் ஒப்பந்தம் முன்னோக்கி செல்ல உதவும் ஒரு முக்கிய காரணியாகும்.
இந்த ஒப்பந்தத்தின் விதிமுறைகளின்படி, டியாகோ கார்சியா உட்பட சாகோஸ் தீவுக்கூட்டத்தின் மீது மொரீஷியஸ் இறையாண்மை கொண்டது என்பதை ஐக்கிய இராச்சியம் ஒப்புக் கொள்ளும்” என்று இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மற்றும் மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், பிராந்திய மற்றும் உலகளாவிய பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கும் டியாகோ கார்சியாவில் இருக்கும் தளத்தின் நீண்டகால, பாதுகாப்பான மற்றும் பயனுள்ள செயல்பாட்டை உறுதி செய்வதற்கான தேவைக்கு எங்கள் இரு நாடுகளும் உறுதிபூண்டுள்ளன என பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |