ஈரானுக்கு அவசர அழைப்பு விடுத்த பிரித்தானியா.. உளவாளிகளால் கடும் அதிருப்தி
பிரித்தானியாவின் வெளிநாட்டு அலுவலகம், ஈரானின் தூதர் சையத் அலி முசாஃபியை அவசரமாக அழைத்துள்ளது.
பிரித்தானியாவிலும் வெளிநாடுகளிலும் “பொறுப்பற்ற மற்றும் நிலைத்தன்மையை பாதிக்கும் நடவடிக்கைகள்” குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய வெளிநாட்டு, கொமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது.
உளவாளிகள் கைது
வெளிநாட்டு உளவு அமைப்புக்கு உதவி செய்ததாக சந்தேகத்தின் பேரில் இரு நபர்களுக்கு எதிராக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

40 வயதான நபர் மற்றும் 22 வயதான ஒருவரும் இம்மாதம் தொடக்கத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள், பிரித்தானியாவின் பழமையான சினகோக் உட்பட சில முக்கிய இடங்களை முன்கூட்டியே கண்காணித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பாதுகாப்புத் திணைக்கள செயலாளர் ஜோன் ஹீலி, கடந்த வெள்ளிக்கிழமை டியாகோ கார்சியா தளத்தை நோக்கி ஈரான் இரண்டு ஏவுகணைகளை ஏவியதாகவும் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஈரானின் மின்சார - எரிசக்தி நிலையங்கள் மீதான இராணுவ தாக்குதல்! ட்ரம்ப் சற்றுமுன்னர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்காவிட்டால்.,ஈரானுக்கு 48 மணி நேரம் கெடு விதித்த டிரம்ப் News Lankasri
வானதிக்கு தெரியவந்த சோழன் பணம் திருடிய விஷயம், அடுத்து நடந்த விஷயம்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam