பிரித்தானியாவில் கடும் பனிப்பொழிவு : முடங்கும் கல்வி நடவடிக்கைகள்
பிரித்தானியாவில் நிலவி வரும் கடும் பனிப்பொழிவு காரணமாக அங்கு மீண்டும் அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் பிரித்தானியாவில் இருக்கும் பெரும்பாலான பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதுடன் சில பாடசாலைகள் பகுதியளவில் திறந்துவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகறது.
மேலும் பல பாடசாலைகள் திறப்பதில் தாமதம் ஏற்படும் எனவும் காலநிலை மாற்றத்தையடுத்து சிலவேலைகளில் அவை முழுமையாக மூடப்படும் எனவும் குறிப்பிடப்படுகிறது.
பிரித்தானியாவில் மஞ்சள் மற்றும் அம்பர் வானிலை எச்சரிக்கைகள் நடைமுறையில் இருப்பதால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பல சேவைகள் முடக்கப்படும் நிலை
மத்திய ஸ்கொட்லாந்தின் Glen Ogle பகுதியில் வெப்பநிலை உடல் உறையும் அளவுக்கு -13C என பதிவாகியுள்ளது. இந்த குளிர்காலத்தில் மிகவும் குளிரான இரவாக இது பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை பனிப்புயல் ஏற்படவும் மின் தடை மற்றும் வேறு பல சேவைகள் முடக்கப்படும் நிலை ஏற்படலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பயண இடையூறும் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், தொடருந்து மற்றும் விமான சேவைகள் தாமதமாகலாம் அல்லது ரத்து செய்யப்படாலம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
you may like this,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |